முகப்பு
தமிழ்நாடு

ஆளுநர் உரையின்போது நடந்தது என்ன? அப்பாவு விளக்கம்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் முதல் நாளில், ஆளுநர் உரையின்போது நடந்த அசாதாரண சம்பவங்கள் குறித்து அவைத் தலைவர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:41 PM
ஆளுநர் உரையின்போது நடந்தது என்ன? அப்பாவு விளக்கம்
பகிர்:


சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் முதல் நாளில், ஆளுநர் உரையின்போது நடந்த அசாதாரண சம்பவங்கள் குறித்து அவைத் தலைவர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், சட்டப்பேரவையில் விதிகளுக்கு உள்பட்டுதான் எம்எல்ஏக்கள் பேச வேண்டும் என்றும் அப்பாவு அவையில் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு பேரவைக் கூட்டத்தில் இன்று பேசிய அவைத் தலைவர் அப்பாவு, ஆளுநர் உரையின்போது குளறுபடிகள் நடந்தன. ஆனால், சட்டப்பேரவையின் மாண்பை காக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மதிநுட்பத்துடன் செயல்பட்டார்.

தமிழக அரசு தயாரிக்கும் உரையை படிக்க வேண்டியது மட்டுமே ஆளுநர் கடமை. ஆளுநர் உரையில் இருக்கும் வரிகளுக்கு தமிழக அரசுதான் பொறுப்பு.  சட்டப்பேரவையில் அசாதாரண சூழலை உருவாக்கியது அரசு அல்ல.  உரையில் சில பகுதிகளை விடுத்தும் சில பகுதிகளை இணைத்தும் ஆளுநர் பேசியதால் பேரவையில் அசாதாரண சூழல் நிலவியது. அதே வேளையில், சட்டப்பேரவையின் மாண்பை காக்கும் வகையில் செயல்பட்ட முதல்வருக்கு நன்றி. 

மேலும், ஆளுநரை உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசும் எம்எல்ஏக்கள் பேரவையின் மாண்பை காக்கும் வகையில் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அப்பாவு ஆளுநர் உரையின் போது காட்டிய கண்ணியத்திற்காக தமிழ்நாடே ஒட்டுமொத்தமாக முதல்வர் ஸ்டாலினின் துணிவை பாராட்டிக்கொண்டு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →