கள்ளக்குறிச்சி பாஜக துணைத் தலைவர் நீக்கம்!
கள்ளக்குறிச்சி பாஜக துணைத் தலைவர் ஆரூர் ரவியை கட்சியில் இருந்து நீக்கி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி பாஜக துணைத் தலைவர் ஆரூர் ரவியை கட்சியில் இருந்து நீக்கி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கடந்த ஜன. 6 ஆம் தேதி நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட முன்னாள் தலைவர் பாலசுந்தரத்தின் ஆதரவாளர் ரவிக்கும், புதிய தலைவர் அருள் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விடியோ இணையத்தில் பரவி வைரலானது.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆரூர் ரவியை கட்சியில் இருந்து நீக்கி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால், கட்சியின் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் ஆரூர் ரவி நீக்கப்படுகிறார். கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி சார்பாக அவரிடம் எந்த வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அண்ணாமலைக்கு 'இஸட்' பிரிவு பாதுகாப்பு?