தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 17-ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

DIN

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 17(திங்கள்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடி அமாவாசையில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு அக்னி தீர்த்த கடற்கரையில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாகும். எனவே, ராமேஸ்வரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். 

இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், மாணவர்களின் நலன் கருதி அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக ஜூலை 22-ம் தேதி பள்ளிகள் இயங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புரோமோவில் கெட்ட வார்த்தை.. சர்ச்சையில் சந்தானம்!

சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

செலவுகளை அதிகரித்துள்ளதா யுபிஐ? ஆய்வு சொல்வது இதுதான்!

வங்கதேசத்துக்கு எதிராக ஜிம்பாப்வே ஆறுதல் வெற்றி!

சென்னையிலிருந்து வேளாங்கண்ணி, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் - முன்பதிவு தொடக்கம்

SCROLL FOR NEXT