தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 9 பேர் கைது!

DIN

ராமேசுவரம்: கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 9 பேருடன் இரண்டு விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். 

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இன்று அதிகாலையில், கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது 5 ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் வேலு, நாகநாதன்(எ)தட்சிண மூர்த்தி என்பவர்களுக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை சிறைபிடித்தனர். படகில் இருந்த மீனவர்கள் சுரேஷ், ஆறுமுகம், மணிகண்டன், குமார், ஜெயசீலன், வேல்முருகன், முத்திருளாண்டி, சிவத்த பொறியன், நல்லதம்பி ஆகிய 9 மீனவர்களை கைது செய்தனர். 

காங்கேசம் துறைமுகத்திற்கு அழைத்து சென்ற கடற்படையினர் நீரியல் துறையினரிடம் ஒப்படைத்தனர். மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்வதற்கான பணிகளை அதிகரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மண்டபம் மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சக மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் மே 19-இல் வைகாசி விசாகத் தேரோட்டம்

காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஈரோட்டில் கஞ்சா சாக்லேட் விற்றவா் கைது

ஈரோடு அரசு மருத்துவமனையில் செவிலியா் தினம் கொண்டாட்டம்

கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT