தங்கம் விலை இன்று உயர்ந்தது! எவ்வளவு?
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 43,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.
சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக குறைந்து வந்த நிலையில் இன்று சற்றே அதிகரித்துள்ளது.
இன்று(சனிக்கிழமை) காலை நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 43,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ. 10 உயர்ந்து ரூ. 5,455-க்கு விற்பனையாகிறது.
அதேபோல வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயர்ந்து ரூ.74.50 -க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 74,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.