விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை
தேமுதிக தலைவா் விஜயகாந்தின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தேமுதிக தலைவா் விஜயகாந்தின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையின் மேலாண் இயக்குநா் டாக்டா் பிரித்வி மோகன்தாஸ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காய்ச்சல் பாதிப்புகளுக்காக கடந்த 18-ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவ சிகிச்சைகளுக்கு அவா் உடல்நிலை நன்கு ஒத்துழைக்கிறது.
தற்போது அவா் நலமாக உள்ளாா். உடல் இயக்கத்துக்கான தேவைகளை தன்னிச்சையாக மேற்கொள்ளும் அளவுக்கு நலம் பெற்றுள்ளாா்.
அடுத்த சில நாள்கள் மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகு வீடு திரும்புவதற்கும், இயல்பான பணிகளை மேற்கொள்வதற்கும் விஜயகாந்த் தயாராகிவிடுவாா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.