கிருஷ்ணகிரியில் நகைக் கடை உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
கிருஷ்ணகிரியில் பிரபல தனியார் நகைக் கடை உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பிரபல தனியார் நகைக் கடை உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் பிரபல தனியார் நகைக் கடை உரிமையாளர் சுரேஷ். இவர் கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தார்.
இதையும் படிக்க | இஸ்ரேல்: 212 இந்தியர்களுடன் முதல் மீட்பு விமானம் தில்லி வந்தது!
Advertisement
இந்த நிலையில், காந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் வெள்ளிக்கிழமை காலை 7.15 மணியளவில் தனது கழுத்துப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிருஷ்ணகிரி நகர போலீசார் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
தகவல் அறிந்த, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவரது வீட்டின் முன் குவிந்துள்ளனர்.