தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது!
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த சில மாதமாக தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.
அதன்படி,சென்னையில் அக்டோபர் 16-(திங்கள்கிழமை) காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,240-க்கும், ஒரு கிராம் ரூ.5,530-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக நேற்று ஒரு சவரன் ரூ.44,440-க்கும், ஒரு கிராம் ரூ.5,555-க்கும் விற்பனையானது.
அதேசமயம், வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.77.50-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.77,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.