கோப்புப்படம் 
தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை மறுத்து சீமான் அதிரடி!

எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் நாதக அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

DIN

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களை கூட்டணி அழைத்ததாகவும், ஆனால் அவரின் அழைப்பை ஏற்க மறுத்ததாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சேலத்தில் இன்று (அக்டோபர் 19) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான் கூறியதாவது: “மாநில அரசு பிரமாதமாக கடிதம் எழுதுகிறது. ஆனால் கடிதம் எழுதுவதற்காகவா மக்கள் ஆட்சியில் அமர்த்தினார்கள். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியை முறித்துக் கொள்ளுமா” என கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், “வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிச்சயமாக தனித்து போட்டியிட உள்ளது. அதிமுக கூட்டணிக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார். ஆனால் நான் அவரின் அழைப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறிவிட்டேன். பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்” எனவும் கூறினார்.

2021 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த அதிமுக கடந்த செப்டம்பரில் பாஜகவுடனான கூட்டணி முறிந்ததாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து மற்ற கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் என்று கூறப்பட்ட நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை சீமான் நேரடியாக மறுத்துள்ளதும், அதை பொதுவெளியில் தெரிவித்ததும் அதிமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுங்க வரி இன்றி பருத்தி இறக்குமதி! டிச. 31 வரை நீட்டிப்பு!

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

திருமணமாகி 15 ஆண்டுகள்! மனைவிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

SCROLL FOR NEXT