தமிழ்நாடு

காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவு: பதக்கம் வழங்க அரசு முடிவு!

DIN

தமிழ்நாடு காவல்துறையில் சட்டம் - ஒழுங்கு, புலனாய்வு, போக்குவரத்து, குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 1.20 லட்சத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் இருக்கின்றனர். இதில் பெண் போலீசாரும் அடங்குவர். 

தமிழக காவல்துறை பல்வேறு சிறப்புகள் வாய்ந்தது. கடந்த ஆண்டு தமிழக காவல்துறையின் சிறப்பான செயல்பாட்டினைப் பாராட்டி ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு வழங்கப்படும் உயரிய கௌரவமான ‘குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி’ வழங்கப்பட்டது.

தமிழக காவல்துறையில் 1973-ஆம் ஆண்டுதான் முதன்முதலில் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அப்போது ஒரு காவல் உதவி ஆய்வாளர், ஒரு தலைமைக் காவலர், 20 காவலர்கள் என மொத்தமாக 22 பெண்களே பணியில் சேர்ந்தனர். ஆனால் தற்போது 35,329 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பணியில் உள்ளனர். 

காவல்துறை பணியில் பெண்கள் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதனை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் பொன்விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பெண் காவலர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்கள் அனைவருக்கும் சிறப்பு பதக்கம் வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

SCROLL FOR NEXT