தமிழ்நாடு

தொடங்கிய அதிமுக ஆலோசனைக் கூட்டம்: வெளியாகவுள்ள கூட்டணி குறித்த அறிவிப்பு!

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக உறுப்பினர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது.

DIN

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக உறுப்பினர்களின் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது.

உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 14-ஆம் தேதி சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பை தொடா்ந்து, முன்னாள் முதல்வா் அண்ணா குறித்து தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு அதிமுக எதிா்ப்பு தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் அறிவித்தாா்.

இந்த நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், மக்களவைத் தோ்தலை எதிா்கொள்வதற்கான ஏற்பாடுகள், பாஜகவுடனான கூட்டணி நிலைப்பாடு உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.

அதன்படி, மாவட்ட செயலாளர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்னர், பாஜகவுடன் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை  எடப்பாடி பழனிசாமி அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

SCROLL FOR NEXT