FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தகுதியானோரை ஓதுவார்களாக நியமித்தால் ஆட்சேபனை இல்லை: தருமபுரம் ஆதினம் பேட்டி

தகுதியானோரை ஓதுவார்களாக நியமித்தால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என  தருமபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் தெரிவித்தார். 

2 பிப்ரவரி 2024, 8:43 am
பகிர்:


தஞ்சாவூர்: தகுதியானோரை ஓதுவார்களாக நியமித்தால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என  தருமபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் தெரிவித்தார். 

ஐப்பசி மாத சதய நாளாகிய புதன்கிழமை காலை மங்கள இசையுடன் தொடங்கிய இந்த விழாவில், கோயிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்தார். இதில், தருமபுர ஆதீனத்தின் 27 -ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சதய விழாக் குழுத் தலைவர் து. செல்வம், துணைத் தலைவர் எஸ்.சி. மேத்தா, மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் ஆர். மகேஸ்வரி உள்ளிட்ட 70-க்கும் அதிகமான அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும், யானை மீது திருமுறைகளை வைத்து மங்கல இசைக் கருவிகள், சிவகணங்கள் முழங்க திருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலிலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி வழியாக மீண்டும் கோயில் வளாகத்தை அடைந்தது. இதில், 48 ஓதுவார்கள் கலந்து கொண்டு திருமுறைப்பண்களைப் பாடி வந்தனர்.

Advertisement

Advertisement

பின்னர், ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது, மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழாவை அரசு விழாவாக கொண்டாடுவது சிறப்புக்குரியது.

திருமுறை கண்டெடுத்து கொடுத்தவர் ராஜராஜசோழன். 48 ஓதுவார்களை நியமனம் செய்து அதன்மூலம் திருமுறைகளை கண்டெடுக்கப்பட்டு பெரியகோயிலை கட்டியவர் ராஜராஜசோழன்.

தகுதியான பெண் ஓதுவார்களை நியமித்தால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆதினத்தில் 5 ஆண்டுகள் முறையாக பயின்றிருக்க வேண்டும். ஒரு ஆண்டுக்கு 40 பதிகங்கள் என ஒவ்வொரு ஆண்டும் நான்காயிரம் பாடல்கள் படிக்க வேண்டும். அப்படி 5 ஆண்டுகள் படித்து தகுதியுள்ளவர்களாக இருந்தால் அதனை வரவேற்கிறோம். செயலி மூலம் பன்னிரு திருமுறைகளை வெளியிட்டு, 14 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments