அக். 31ல் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணி அளவில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் குறித்த குறிப்புகள் அமைச்சர்களுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | வாடிகன் கூட்டத்தில் முதல்முறையாக வாக்களிக்கும் பெண்கள்!
ஆளுநரிடம் நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்கள், புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.