தமிழ்நாடு

ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த கோரிக்கை: தலைமைத் தேர்தல் ஆணையர்

DIN

சென்னை: தேர்தல் நேரத்தில், பணப்பட்டுவாடாவைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கோரிக்கை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் சென்னையில் இன்று பிற்பகலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக, ஒரு அரசியல் கட்சி இப்போதே பணப்பட்டுவாடா செய்திருப்பதாக புகார் வரப்பெற்றுள்ளது. பதற்றமான தொகுதிகள் கண்டறியப்பட்டு துணை ராணுவத்தினர் நிறுத்தப்படுவர்.

தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா மற்றும் மது வினியோகத்தைத் தடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ன. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. தமிழ்நாட்டில் 6.19 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து கடந்த இரண்டு நாள்களாக சென்னையில் ஆலோசனை நடத்தி வந்தார் தலைமைத் தேர்தல் ஆணையர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா கே.எல்.ராகுல்?

48 லட்சம் பேர் பார்த்த ‘மோடிக்கு ராகுல் பதிலடி’ விடியோ!

அல்-ஜசீரா அலுவலகங்களில் திடீர் சோதனை!

நடிகர் ரஜினியை சந்தித்த ‘ஆர்டிஎக்ஸ்’ படக்குழு!

எந்த வயது வரை தாய்மைப்பேறு அடையலாம்?

SCROLL FOR NEXT