முகப்பு
தமிழ்நாடு

கண்டா வரச் சொல்லுங்க போஸ்டருக்கு பதில் சொன்ன எம்.பி.

கண்டா வரச் சொல்லுங்க போஸ்டருக்கு ஐ எம் வெயிட்டிங் என பதில் சொன்ன சு. வெங்கடேசன்.

Updated On : 29 பிப்ரவரி 2024, 11:34 am IST
பகிர்:

பல்வேறு விஷயங்களில், தமிழகத்துக்காக, மத்திய அரசிடம் நேரடியாக குரல் கொடுத்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனைக் காணவில்லை என்று போஸ்டர் ஒட்டியவர்களுக்கு, ஐ எம் வெயிட்டிங் என பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளரும், அரசியல்வாதியுமான சு. வெங்கடேசன், மதுரை மக்களவை தொகுதியிலிருந்து போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு விஷயங்கள் குறித்து மத்திய அரசுக்கு குரல் கொடுத்து, அதனை தீர்ப்பதில் முன்னிலை வகித்து வருபவர். தொடர்ந்து மதுரை மக்களவைத் தொகுதிகளின் பிரச்னைகளை பேசியும், சமூக ஊடகங்கள் வாயிலாக எடுத்துரைத்தும் வருவது வழக்கம்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அவரைக் காணவில்லை என்றும், கண்டா வரச் சொல்லுங்க என்று சு. வெங்கடேசனைக் காணவில்லை என்று கூறி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், எங்க தொகுதி எம்.பி.ஐ. காணவில்லை என மதுரை நாடாளுமன்றத் தொகுதி மக்கள் கேட்பது போல போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததைப் பார்த்த வெங்கடேசன்.. ஒன்றும் செய்யவில்லை. அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து அதனை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, காத்திருக்கிறேன் என்று ஆங்கிலத்தில் ஐ எம் வெயிட்டிங் என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும், கையோடு கூட்டிவாருங்கள் என்று ஹேஷ்டேக்கும் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments