பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 
தமிழ்நாடு

தர்மபுரி தேவாலயம் காணொலி விவகாரம்: அண்ணாமலை மீது வழக்கு!

தர்மபுரி தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்படாததால் அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொலி பரவிவந்த நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

DIN

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் மீது மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் தர்மபுரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

தர்மபுரியில் நடைபேற்ற 'என் மண் என் மக்கள்' பேரணியின்போது பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள செயின்ட் லோர்டெஸ் தேவாலயத்தில் உள்ள மேரி மாதா சிலைக்கு மாலை அணிவிக்க முயன்ற அண்ணாமைலை கிறிஸ்தவ இளைஞர்கள் சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அண்ணாமலைக்கும் அந்த இளைஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.   

அவரைத் தடுத்த இளைஞர்கள் மணிப்பூரில் நடக்கும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அண்ணாமலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இது தொடர்பான காணொலி வலைதளத்தில் பரவியது. அதில் மணிப்பூர் பிரச்னை குறித்து அண்ணாமலை விவரிக்கு முயல்வதும், 'உங்களுக்கு என்னைத் தடுக்க என்ன உரிமை உள்ளது? இப்போதே நான் 10,000 பேருடன் தர்ணாவில் ஈடுபட்டால் என்ன செய்வீர்கள்' என வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் காணொலியில் இடம்பெற்றது. 

கார்த்திக் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் 153 (A), 504 மற்றும் 505 (2) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் தர்மபுரியில் உள்ள பொம்மிடி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோஸ்டா ரிகா அதிபா் தோ்தல்: ஆளுங்கட்சி வேட்பாளா் வெற்றி

ஈரான் அணுசக்தி விவகாரம்! பதற்றத்தைத் தணிக்க தொடா் முயற்சி: ரஷியா

பட்ஜெட் நாள் சரிவுக்குப் பிறகு பங்குச்சந்தையில் மீண்டும் ’காளை’ ஆதிக்கம்!

சீனாவின் முன்னாள் நீதித்துறை அமைச்சருக்கு ஆயுள் சிறை: ஊழல் வழக்கில் தண்டனை

தலைநகரில் அடா் பனிமூட்டம்; காற்றின் தரத்தில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT