பார்த்திபனின் 'டீன்ஸ்' படத்திற்கு தடை கோரி வழக்கு
பார்த்திபனின் 'டீன்ஸ்' படத்திற்கு தடை கோரி வழக்கு
'டீன்ஸ்' திரைப்படத்திற்கு தடை கோரி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பார்த்திபன் இயக்கியிருக்கும் படம் டீன்ஸ். குழந்தைகளை மையமாகக் கொண்டு இப்படத்தை அவர் எடுத்துள்ளார். படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். காவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பயோஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரித்துள்ளன. அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் பரவலாக கவனிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
படம் வரும் ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில் தான் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படமும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் 'டீன்ஸ்' திரைப்படத்திற்கு தடை கோரி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கிராபிக்ஸ் பணியாற்றிய சிவ பிரசாத் தொடர்ந்த வழக்கில் நடிகர் பார்த்திபன் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.