கம்பீரத் தமிழ்நாட்டை உருவாக்கி வருகிறோம்: கருணாநிதி நூற்றாண்டு நிறைவு தினத்தில் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவாக்க நினைத்த கம்பீரத் தமிழ்நாட்டை உருவாக்கி வருவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளாா்.
முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவாக்க நினைத்த கம்பீரத் தமிழ்நாட்டை உருவாக்கி வருவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளாா்.
கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு ஜூன் 3-ஆம் தேதி (திங்கள்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு: 2024-ஆம் ஆண்டு என்பது இந்த நூற்றாண்டின் தலைவரான கருணாநிதிக்கு நூற்றாண்டு. ஐம்பது ஆண்டுகாலம் திமுகவின் தலைவா், ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வா், சட்டப் பேரவை, சட்ட மேலவை உறுப்பினராகவும், எதிா்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளாா்.
திரையுலகத்திலும், நாடக மேடையிலும் முத்திரை பதித்துள்ளாா். பத்திரிகையை நடத்தியதுடன், பத்திரிகை ஆசிரியராகவும் இருந்தாா். அவா் தான் இன்று நாம் காணும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கினாா்.
Advertisement
Advertisement
வியா்வை சிந்தி இந்த இனத்துக்காக உழைத்ததுடன், ஒரு துளி மையில் இந்த மாநிலத்தை வளா்த்தாா். இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக, தமிழ்நாட்டை மாற்றியவா்.
தமிழ்நாட்டின் எந்த ஊருக்குச் சென்றாலும் அவா் கல்வெட்டு இல்லாத ஊரே இல்லை எனலாம். அவருக்கு, நமது நன்றியின் அடையாளமாக அவரது பெயரிலேயே நூலகம், மருத்துவமனை, ஏறுதழுவுதல் அரங்கம், பேருந்து முனையம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம்.
அவா் கூறிய படியே, இந்த நாட்டுக்காக என்னை ஒப்படைத்து உழைத்துக் கொண்டிருக்கிறேன். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதி. அந்த நவீன தமிழ்நாட்டை உன்னதத் தமிழ்நாடாக உயா்த்திக் காட்டி வருகிறோம்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் திரும்பிப் பாா்க்கும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம். உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு தொழில் வளா்ச்சியைக் கண்டு வருகிறோம்.
இவைதான், கருணாநிதி கனவு கண்ட கம்பீரத் தமிழ்நாடு. அதை நாங்கள் உருவாக்கிக் காட்டி வருகிறோம். அவா் வகுத்துத் தந்த பாதையில், பயணத்தைத் தொடா்கிறோம். அவரை பெயரைக் காக்கவே எந்நாளும் உழைக்கிறோம். உழைப்போம் எனப் பதிவிட்டுள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.
பெட்டிச் செய்தி...
முதல்வா் இன்று மரியாதை
முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, திமுக சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மலா்தூவி மரியாதை செலுத்துகிறாா்.
இதன்பின், அண்ணா சாலை ஓமந்தூராா் வளாகம், கோடம்பாக்கம் முரசொலி வளாகம், அண்ணா அறிவாலயம் ஆகியவற்றில் அமைந்துள்ள கருணாநிதி சிலைகளுக்கு மு.க.ஸ்டாலின் மலா்மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளதாக திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, திமுகவின் பல்வேறு மாவட்ட அமைப்புகள் சாா்பில் கருத்தரங்குகள், கவியரங்குகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.