சென்னை உள்பட தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் சென்னை உள்பட அநேக மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யக்கூடும்
நள்ளிரவு 1 மணி வரை தமிழகத்தில் சென்னை உள்பட அநேக மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யக்கூடுமென சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை, அடுத்த 2 மணி நேரத்திற்குள்ளாக பல்லாவரம்,செங்கல்பட்டு,கலவை,வாலாஜாபாத்,பூவிருந்தவல்லி,தாம்பரம்,வண்டலூர்,அம்பத்தூர், அயனாவரம்,மாதவரம் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.