தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

குடியுரிமை திருத்தச் சட்டம்: விஜய் வெளியிட்ட முதல் அறிக்கை!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அவரது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

DIN

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) திங்கள்கிழமை அமல்படுத்தப்பட்ட நிலையில், அந்தச் சட்ட விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.

இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

"சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்க்கது அல்ல.

தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்." என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், விஜய் வெளியிட்ட அறிக்கையில், குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானது குறித்து மத்திய அரசை விமர்சிக்காமல் தவிர்த்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகள் உயிருக்கு ஆபத்து! கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவியின் பெற்றோர் கதறல்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!

கிணறுக்குள் குதித்த பெண்! காப்பாற்றச் சென்ற தீயணைப்பு வீரர் உள்பட மூவர் பலி!!

இருமல் மருந்து விவகாரம்: சென்னையில் அமலாக்கத் துறை சோதனை

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு

SCROLL FOR NEXT