கடந்த ஆண்டுகளில் அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சி, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக முன்னதாக சரத்குமார் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் சரத்குமார் இணைத்துள்ளார்.
பாஜகவுடன் சமக கட்சி கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில், சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் சரத்குமார் இணைத்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முடிவு நாட்டின் வளர்ச்சிக்காகவும், இளைஞர்களின் வளர்ச்சிக்காகவும் எடுக்கப்பட்டதாகவும், காமராஜரின் ஆட்சியை மோடி தருவதாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜகவுடன் இணைந்தது சமகவின் முடிவல்ல, இது மக்களின் பணிக்கான தொடக்கம் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
க்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.