தமிழ்நாடு

எய்ம்ஸ் துவக்க விழா புகைப்படத்தைக் கொண்டு உதயநிதி பிரசாரம்!

எடப்பாடி பழனிசாமி போல் இடத்திற்கு ஏற்றார் போல் பேசும் பழக்கம் திமுகவிற்கு இல்லை என அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார்.

DIN

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக செல்வம் அறிவிக்கப்பட்டு, இன்று வேட்பு மனு தாக்கல் செய்து பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு ஆதரவாக தமிழக இளைஞர் நலன் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காஞ்சிபுரம் தேரடிப் பகுதியில் திறந்தவெளி வேனில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு ரயில் பாதை இருவழிப் பாதையாக மாற்றப்படும், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையம் மேம்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

மேலும், எடப்பாடி பழனிச்சாமி தான் செல்லும் இடங்களில் அனைத்திலும் ஒரே மாதிரியாக பேசுவதாகவும், அதனை மாற்றும்படி கூறினார். அதற்கு காஞ்சியில் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், திமுகவை சேர்ந்தவர்கள் எப்போதும் ஒரே மாதிரி நிலையை கொண்டவர்கள் எனவும், பச்சோந்திகள் அல்ல எனவும், எடப்பாடி பழனிச்சாமி போல் இடத்திற்கு ஏற்றார் போல் பேசும் பழக்கம் திமுகவிற்கு இல்லை எனத் தெரிவித்தார்.

மேலும், எய்ம்ஸ் துவக்க விழாவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் புகைப்படத்தைக் கொண்டு உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.

இந்நிகழ்விற்கு முன்பு பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மலர் மாலை அணிவித்து பாஜக ஆட்சியை வீழ்த்துவோம் என அங்குள்ள குறிப்பேட்டில் எழுதினார்.

இந்நிகழ்வின் போது அமைச்சர் அன்பரசன், மாவட்ட செயலாளர் சுந்தர், சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘கைப்பேசிக்கு வரும் குறுஞ்செய்தி லிங்க்கை தொடவேண்டாம்’

மதுராந்தகம், செய்யூரில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

துாய்மைப் பணியாளா்களுடன் தலைமைச் செயலா் வீட்டை முற்றுகையிட்ட பாஜக எம்எல்ஏ

முன்னாள் ஊராட்சித் தலைவரைத் தாக்கி 8 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் கொள்ளை

மறைந்த சுதாகா் ரெட்டி உருவப்படத்திற்கு புதுவை இந்தியா கூட்டணி தலைவா்கள் அஞ்சலி

SCROLL FOR NEXT