தமிழக மீனவர்கள் 33 பேர் விடுதலை, 3 பேருக்கு சிறை!
கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், நாகையைச் சேர்ந்த 36 மீனவர்களில் 33 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கைதான தமிழக மீனவர்கள் 33 பேர் இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
ராமேஸ்வரம், நாகையைச் சேர்ந்த 36 மீனவர்கள் கடந்தாண்டு மார்ச் 15, 17-ல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
Advertisement
Advertisement
தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக பிரதமர் மீது முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், நாகையைச் சேர்ந்த 36 மீனவர்களில் 33 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், எல்லைத் தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், இருவருக்கு 6 மாதங்கள் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.