FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7 மே 2024, 2:33 pm
நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
பகிர்:

தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எங்கெல்லாம் கோடைமழை பெய்யும்

Advertisement

Advertisement

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை(மே 08) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள்(மே 09) நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்ப அலை முன்னெச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை நிலவும். மே 8 முதல் 11 வரை அடுத்த 4 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 செல்சியஸ் வரை படிப்படியாகக் குறையக்கூடும்.

வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 41-43 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39-40 டிகிரி செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36-38 டிகிரியும் இருக்கக்கூடும்.

மீனவர்கள்

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை

கோடநாடு, பென்னாகரம் தலா 6 செ.மீ, பையூர் நெடுங்கல், பாரூர் தலா 5, ஆம்பூர், மேலாலத்தூர், தர்மபுரி, வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி தலா 4, ஒகேனக்கல், வடபுதுப்பட்டு, ஜமுனாமரத்தூர், கேபிஆர் அணை தலா 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்ப அலை

அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 43.5 செல்சியஸ், ஈரோட்டில் 43.4, மற்றும் திருச்சியில் 42.7, மதுரையில் 42.2 செல்சியஸ் ஆகவும் பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.