முகப்பு
தமிழ்நாடு

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை!

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிந்துகொள்ளலாம்.

Updated On : 11 நவம்பர் 2024, 1:06 pm IST
4 மாவட்டங்களில் கனமழை
பகிர்:

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாள்களாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதியில் மழையில்லாமல் சற்று விடுதலை அளித்துள்ளது. இந்த நிலையில், இன்றும், நாளையும் சென்னையில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,

Advertisement

Advertisement

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (11.11.24) காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் நிலவுகறிது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த இரண்டு நாள்களில் மேற்கு திசையில், தமிழக-இங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.

இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த 36 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நவ. 11 (இன்று) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ. 12 சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் 12 மாவட்டங்களிலும்,

நவ. 13ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர் உள்பட 17 மாவட்டங்களில் கனமழையும்,

நவ.14ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்பட 27 மாவட்டங்களில் கனமழையும்,

நவ.15ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 25 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

சென்னையை பொருத்தவரை..

அடுத்த இரண்டு நாள்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மீனவர்கள்..

தென்மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments