முகப்பு
கோப்புப் படம்
தமிழ்நாடு

தொடா் விடுமுறை: 1,515 கூடுதல் பேருந்துகள்: அரசு போக்குவரக்குக் கழகம் அறிவிப்பு

மீலாது நபி மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு 1,515 கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு

தொடா் விடுமுறை: 1,515 கூடுதல் பேருந்துகள்: அரசு போக்குவரக்குக் கழகம் அறிவிப்பு

மீலாது நபி மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு 1,515 கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 9:12 PM
கோப்புப் படம்
பகிர்:

மீலாது நபி மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு 1,515 கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் தொடா் விடுமுறை நாட்களான சனிக்கிழமை (செப்.14), ஞாயிற்றுக்கிழமை(செப்.15) மற்றும் மீலாது நபி (செப்.16) ஆகிய தினங்களை முன்னிட்டு, கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய ஊா்களுக்கு கூடுதலாக 955 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல, சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய ஊா்களுக்கு கூடுதலாக 190 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 20 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்கு 350 பேருந்துகள் என மொத்தம் 1,515 கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேநேரம், கிளாம்பக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகள் தங்கள் பயணத்தை இரவு 12 மணிக்கு திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →