தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், முன்னாள் தலைவர் அண்ணாமலையின் தலைமை நிர்வாகத் திறன்களை பாராட்டி அவருக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை உள்பட 39 பேருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினா் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுழுவதும் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் தலா ஒருவருக்கு தேசிய பொதுக்குழுஉறுப்பினா் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, முன்னாள் தலைவா்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன், கே.பி.ராமலிங்கம், கராத்தே தியாகராஜன், கரு.நாகராஜன், ராம.சீனிவாசன் உள்ளிட்டோருக்கும் தேசிய பொதுக்குழு உறுப்பினா் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்ணாமலையின் தில்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: திருவண்ணாமலை: அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; 4 பேர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.