FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கோவையில் விசைத்தறி நெசவாளர்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன்- நயினார் நாகேந்திரன்

கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறி நெசவாளர்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

19 ஏப்ரல் 2025, 8:54 pm
கோவையில் நயினார் நாகேந்திரன்.
பகிர்:

கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறி நெசவாளர்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சற்று முன்பு, கோயம்புத்தூர் அருகே சோமனூரில் கூலி உயர்வு மற்றும் உழைப்புக்கேற்ற ஊதிய கோரிக்கைகளைத் தமிழக அரசிடம் வலியுறுத்தி கடந்த சில தினங்களாக போராடி வரும் விசைத்தறி நெசவாளப் பெருமக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தேன்.

Advertisement

Advertisement

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பார்த்து தங்களது உடலை வருத்திக் கொள்ள வேண்டாமென கேட்டுக் கொண்டதோடு, கூட்டத்தில் உரையாடுகையில், சட்டமன்றத்தில் இதைப் பற்றி பேசி தமிழக முதல்வரிடம் வலியுறுத்துவேன் எனவும், கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் காந்தியையும் சந்தித்து விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்வேன் எனவும் உறுதியளித்தேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனில் ஈஸ்டர் நாளில் மட்டும் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் திடீர் அறிவிப்பு!

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கோவை சோமனூர் கருமத்தம்பட்டியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.