பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பட்டானூரில் உள்ள சங்கமித்ரா அரங்கில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் பொதுக்குழுவில் பாமக கெளரவத் தலைவர் ஜி.கே. மணி வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ப.தா. அருள்மொழி, பொதுச்செயலர் முரளிசங்கர், நிர்வாகக் குழு உறுப்பினர் காந்திமதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக நிறுவனர் ராமதாஸே தேர்வு செய்யப்பட்டதுடன், 37 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, அன்புமணி ராமதாஸ்தான் தலைவர் பொறுப்பு வகித்து வந்தார்.
மேலும், பொதுக்குழுவுக்கு நிறுவனரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலும், அவருக்கு அழைப்பும் விடுக்கப்பட வேண்டும் என்றும் கட்சியின் விதியில் திருத்தம் செய்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்க ராமதாஸுக்கு முழு அதிகாரம், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்காததற்கு கண்டனம் மற்றும் இட ஒதுக்கீடு வேண்டி மீண்டும் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதுமட்டுமின்றி, ராமதாஸை அன்புமணி அவமதித்து விட்டதாக பொதுக்குழுவில் குற்றச்சாட்டுகளும், தந்தை சொல்மிக்க மந்திரமில்லை மற்றும் If you're Bad, I'm your Dad என்ற பதாகைகளையும் கட்சித் தொண்டர்கள் ஏந்தியிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.