டிட்வா புயல் காரணமாக, சென்னை பாரிமுனையில் அதிகபட்சமாக 254 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 134 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வட தமிழகத்தை அச்சுறுத்தி வந்த டித்வா புயல் வலுவிழந்து, சென்னை அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டது. இதன் விளைவாக ஞாயிற்றுக்கிழமை இரவு சாரலுடன் மழை பெய்யத் தொடங்கியது.
நள்ளிரவுக்குப் பின்னர் நகர் முழுவதும் பரவலாக மிதமான மழைத் தொடங்கியது. திங்கள்கிழமை காலை சென்னை நகர் முழுவதும், புறநகர் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் தண்ணீர் தேங்கியது.
இந்த நிலையில், இன்று(டிச. 2) காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேர முடிவில் பதிவான மழை அளவு:
அதிகபட்சமாக பாரிமுனையில் 254 மி.மீ., ஐஸ் ஹெவுஸில் 231 மி.மீ, பேசின் பிரிட்ஜில் 207 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணூரில் அதிகப்பட்சமாக 260.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பொன்னேரியில் 206 மி.மீ, செங்குன்றத்தில் 185 மி.மீ மழைப் பொழிந்துள்ளது.
இதையும் படிக்க: சென்னை அருகே நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! கல்பாக்கம் அருகே கரையைக் கடக்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.