சென்னையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த கூட்டத்தில் தற்காலிக அவைத் தலைவராக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியை நியமிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அதிமுகவின் அவைத் தலைவர் தமிழ் உசேனுக்கு திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதால் அவர் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில், தற்காலிக அவைத் தலைவராக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியை நியமித்த இபிஎஸ், அவர் தலைமையில் பொதுக்குழு நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ள நிலையில், ஓ. பன்னீர்செல்வம் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டபேரவைத் தேர்தல் தொடங்கவுள்ளதால் அதிமுகவின் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுடனான தொகுதிப் பங்கீடு, தேர்தல் வியூகங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.