ராகுல் காந்தி 
தமிழ்நாடு

பேரவைத் தேர்தல்: தமிழகம் வரும் ராகுல் காந்தி! காங்கிரஸ் அறிவிப்பு!

பேரவைத் தேர்தலுக்காக தமிழகம் வரவுள்ள ராகுல் காந்தி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னெடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  கிராம கமிட்டி மாநில மாநாட்டிலும் பிரியங்கா காந்தி பேரணியிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.

வரும் 2026 பேரவைத் தேர்தலையொட்டி, மக்களை சந்திப்பதற்காக அரசியல் தலைவர்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நடைப்பயணம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ராகுல் காந்தி பங்கேற்கும் கிராம கமிட்டி மாநில மாநாட்டையும் பிரியங்கா காந்தியின் பேரணியையும் ஒருங்கிணைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி  தமிழ்நாடு முழுவதும் பங்கேற்கும் கிராம கமிட்டி மாநில மாநாட்டை ஒருங்கிணைப்பதற்காக குழுக்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

மேலும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொள்ளும் மகளிர் பேரணி சிறப்பாக நடத்திடஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவில் . கே.வீ. தங்கபாலு, சு. திருநாவுக்கரசர், கே.எஸ். அழகிரி, எஸ். ஜோதிமணி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Rahul Gandhi to undertake walking tour in Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராசிபுரத்தில் மாணவா்கள் பங்கேற்ற மாரத்தான்

கேரம் விளையாட்டுப் போட்டி!

நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மறைந்த பழங்குடியின ஓவியருக்கு பத்மஸ்ரீ விருது

குடியரசு தினம்: பாகிஸ்தான் - இந்தியா வா்த்தக கவுன்சில் வாழ்த்து! இணைந்து செயல்பட விருப்பம்

வளா்ந்த பாரதத்துக்கு மகளிா் பங்களிப்பு முக்கியம்: குடியரசுத் தலைவா் உரை

SCROLL FOR NEXT