எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, வரும் டிச. 17 ஆம் தேதி பாமக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. பாமகவில் அன்புமணிக்கு எந்த உரிமையும் இல்லை என ராமதாஸ் கூறி வருகிறார்.
இந்தச் சூழலில், அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள, தேர்தலில் பாமக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து வருகிற இன்று(டிச.14) முதல் 20-ஆம் தேதி வரை ஒரு வாரத்துக்கு விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி அறிவித்தார்.
இந்த நிலையில், வரும் டிச. 17 ஆம் தேதி பாமக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் டிச. 17 புதன்கிழமை அன்று காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் எனது தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, அடுத்த கட்ட செயல்பாடுகள், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட முக்கியமான கருத்துகள் குறித்து ஆலோசிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேநாளில், சென்னையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி அன்புமணி போராட்டம் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஈரோட்டில் டிச. 18-ல் விஜய் சுற்றுப்பயணம்: செங்கோட்டையன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.