புதுச்சேரி திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!
சட்டப்பேரவை தேர்தலையொட்டி புதுச்சேரி திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட ஆலோசனை குறித்து..
புதுச்சேரி திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச., 23) ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுவரும் ஆலோசனையில் புதுச்சேரி திமுக அமைப்பாளர் சிவா,புதுச்சேரி-காரைக்கால் மாநில அமைப்பாளர் ஏஎம்எச்.நாஜிம், எம்.எல்.ஏ., மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், இந்த ஆலோசனையில் புதுச்சேரி மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல்.சம்பத், எம்.எல்.ஏ., தலைமைச் செயற்குழு உறுப்பினர் எம்.நாக தியாகராஜன், எம்.எல்.ஏ., ஆகியோர் நேரில் சந்தித்து, 2026-ல் நடைபெற உள்ள புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.
Advertisement
Advertisement
அப்போது திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
M.K. Stalin holds discussions with Puducherry DMK functionaries
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.