மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கம்: விஜய் தொடங்கி வைத்தார்!
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கத்தை தவெக தலைவர் விஜய் தொடங்கி வைத்தார்.
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கத்தை தவெக தலைவர் விஜய் தொடங்கி வைத்தார்.
தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா, மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இன்று நடைபெற்று வருகிறது. தொடக்க விழாவில் தவெக தலைவர் விஜய், அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் விழாவில் பங்கேற்றுள்ளார்.
மும்மொழிக்கொள்கை எதிர்ப்பு, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கி இருக்கிறது. இந்த இயக்கத்தை முதல் கையெழுத்திட்டு விஜய் தொடங்கி வைத்தார். இதற்காக வைக்கப்பட்டுள்ள பேனரில் மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. இதில், கட்சி நிர்வாகிகளும் கையெழுத்திட்டனர்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சி நடக்கும் வழிநெடுகிலும் விஜய்யை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனர்களிலும் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தும், கண்டனம் தெரிவித்தும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.