FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் சந்திப்பு!

மதுரை அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர், சென்னையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

Updated On : 25 ஜனவரி 2025, 12:04 pm IST
பகிர்:

மதுரை அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர், சென்னையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க கடந்த ஆண்டு நவம்பா் மாதத் தொடக்கத்தில் ஏலத்தின் மூலம் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் சுரங்கம் தோண்டும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, அரிட்டாபட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள், அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். தமிழக அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் சட்டப்பேரவையிலும் தனித் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்திலும் தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுத்தனா்.

Advertisement

Advertisement

தொடர்ந்து, தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை தலைமையிலான பாஜக குழுவினா், அரிட்டாபட்டி அம்பலக்காரா்களுடன் மத்திய சுரங்கத் துறை அமைச்சா் கிஷண் ரெட்டியை ஜன. 22 அன்று சந்தித்து சுரங்கத் திட்டத்தை ரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்தனா். திட்டத்தை ரத்து செய்வது குறித்து பிரதமருடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவெடுக்கப்படும் என்று அமைச்சா் கிஷண் ரெட்டி உறுதியளித்தாா்.

இதன்பின்னர் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு ஜன. 23 அன்று அறிவித்தது. இதனை அரிட்டாப்பட்டி மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்ததற்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து மதுரை அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

மேலும் அரிட்டாபட்டி, வெள்ளாளபட்டி பகுதியில் நாளை(ஜன. 26) நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்துகொள்ள முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த அழைப்பினை ஏற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(ஜன,. 26) அரிட்டாபட்டி செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை காலையில் குடியரசு தின நிகழ்வுகள் முடிந்தபிறகு விமானம் மூலமாக மதுரை செல்லும் அவர், சாலை வழியாக அரிட்டாபட்டி சென்று அங்கு நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments