பூத் கமிட்டி கூட்டத்தில் பாஜகவினர். 
தமிழ்நாடு

தேர்தலுக்கு தயாராகும் பாஜக! மாநாடு அறிவிப்பு!

தமிழக பாஜகவின் மாநாடு அறிவிப்பு தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக பாஜகவின் முதல் மாநாடு வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் தமிழக பாஜக சார்பில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் மாநாடு தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் 2026 பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் நோக்கில் அடுத்தடுத்த மாநாடுகளை பாஜக நடத்தவுள்ளது.

இந்த நிலையில், தமிழக பாஜகவின் முதல் மாநாடு வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ளது. பாஜகவின் தனிப்பெரும் பலத்தை நிரூபிக்கும் விதமாக அடுத்தடுத்த மாநாடுகளை பாஜக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

'2026 பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி, அதிமுகதான் ஆட்சி அமைக்கும். நான்தான் முதல்வர் வேட்பாளர்' என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பாஜகவின் "பூத் வலிமை படுத்தும் பயணம்" எனும் தலைப்பில் மாநில பயிலரங்கம், சென்னை, காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தேசிய மாநில மாவட்ட தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

It has been announced that the first convention of the Tamil Nadu BJP will be held in Nellai on August 17th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் 2025 இறுதிக்குள் சந்தைக்கு வரும்: பிரதமர் மோடி

உன் அழகில் மயிலும் தோற்கும்... அனன்யா பாண்டே!

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் இதுவரை 1.49 லட்சம் பேர் பயன்: முதல்வர் ஸ்டாலின்

ரஜினியைச் சந்தித்த சிம்ரன்! ஏன்?

அனில் அம்பானியால் எஸ்பிஐ-க்கு ரூ. 2,929 கோடி இழப்பு: சிபிஐ சோதனை முடிவு!

SCROLL FOR NEXT