விண்ணை முட்டும் புகைமூட்டம். 
தமிழ்நாடு

டேங்கர் ரயில் தீ விபத்து: விண்ணை முட்டும் புகைமூட்டம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

டேங்கர் ரயில் பெட்டிகள் தீப்பற்றி எரிவதால் அப்பகுதியில் விண்ணை முட்டும் புகைமூட்டம்.

இணையதளச் செய்திப் பிரிவு

திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் ஏற்றிவந்த டேங்கர் ரயில் தடம்புரண்டு விபத்துக்கி தீப்பற்றி எரிந்து வருவதால் அப்பகுதியில் விண்ணை முட்டும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது.

டேங்கர் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி, தீப்பற்றி எரிந்ததில் 8 பெட்டிகள் முழுமையாக நாசமானது.

சென்னை எண்ணூரிலிருந்து 52 டேங்கர்களில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் மைசூர் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், டீசல் என்ஜின் தடம் புரண்டு விபத்துள்ளானது.

கச்சா எண்ணெய் டேங்கரில் உராய்வு ஏற்பட்டதில் தீப்பற்றி எரிந்து, அடுத்தடுத்து 7 டேங்கர் பெட்டிகளில் மளமளவென பரவியது.

இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த பெட்டிகளில் தீ பரவிக் கொண்டிருக்கிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் டேங்கர் ரயிலின் பெட்டிகள் எரிந்து வருவதால், அப்பகுதியில் விண்ணை முட்டும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது.

மேலும், 70% தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் 18 பெட்டிகள் தீயில் எரிந்து சேதமடைந்ததாகவும் தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தினால் ரயில்வே இருப்புப் பாதை, சிக்னல் ஃபோர்டு, மின் இணைப்புகள் அனைத்தும் அறுந்து விழுந்தன, 200 மீட்டர் தொலைவுக்கு தண்டவாளங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் விரைவு ரயில்கள், புறநகர் ரயில்கள் என 15 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

A tanker train carrying crude oil derailed and caught fire near Thiruvallur, causing a thick layer of smoke to engulf the area.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஞ்சாமி தந்தானே... ரசிகர்களைக் கவரும் இட்லி கடை பாடல்!

கூலி படத்துக்கு யு/ஏ சான்று கிடையாது: உயா் நீதிமன்றம்

திருப்பூரில் ரூ. 3,000 கோடி வர்த்தக பாதிப்பு! மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்!

ஆர்வமூட்டும் மம்மூட்டியின் களம்காவல் டீசர்!

சுங்க வரி இன்றி பருத்தி இறக்குமதி! டிச. 31 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT