முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடி, திருச்சிக்கு கூடுதல் விமான சேவைகள்!

தூத்துக்குடி, திருச்சிக்கு விமான சேவைகள் அதிகரிப்பது பற்றி..

Updated On : 10 மார்ச் 2025, 1:09 pm IST
திருச்சி விமான நிலையம்
பகிர்:

சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி விமான நிலையங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது.

தற்போது, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இருவழித்தடங்களில் நாள்தோறும் 8 விமான சேவைகளும், திருச்சிக்கு 14 விமான சேவைகளும் இயக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சென்னை - தூத்துக்குடி இடையே 12 சேவையாகவும், சென்னை - திருச்சி இடையே 22 சேவையாகவும் அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற மார்ச் 30ஆம் தேதிமுதல் விமான சேவை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments