மக்கள் நீதி மய்யம் - திமுக உடனான கூட்டணி குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு படத்திறப்பு நிகழ்வு தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள புது காரியப்பட்டி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய கமல்ஹாசன் பேசியதாவது:
முதலில் அரசியல் கட்சி ஆரம்பிக்காமல் - தொண்டுகள் செய்து - அரசியலில் இருந்த மூத்தவர்களிடமும், மூத்த கட்சிகளிடமும் அறிவுரை பெற்றுக் கொண்டு கட்சி தொடங்கி இருக்கிறேன்.
இதில் மாற்றுக்கருத்து இருந்தே ஆக வேண்டும். அதற்கு பெயர்தான் ஜனநாயகம். ஆனால் நாடு என்று வரும்போது கூடி நின்றாக வேண்டும்.
ரிமோட்டை தூக்கிப்போட்டீர்களே. எதற்காக திமுகவில் சேர்ந்தீர்கள் என்று கேட்கிறார்கள். விமர்சிக்கும் உரிமை ஜனநாயகத்திற்கு உண்டு. ஏன் மறுபடி திமுகவிற்கு போனீர்கள் என்றால், ரிமோட்டை வேறு ஒருவன் தூக்கிட்டு ஓடிட்டான்.
அப்படியாக, அங்கு போகக்கூடாது. ரிமோட் மாநிலத்தில் இருக்க வேண்டும். கல்வியும் அப்படித்தான் இருக்க வேண்டும். ரிமோட்டை கொடுப்போமா நாங்கள், எடுத்துட்டு வா திருப்பி ஒளித்து வைத்துக் கொள்வோம்.
ஒருவரை ஒருவர் ரிமோட்டால் அடித்துக் கொள்ள வேண்டாம். எவனாவது வந்து எடுத்துக்கொண்டு போய் விடுவார்கள். அப்படின்னு எடுத்த முடிவுதான் இந்தக் கூட்டணி. புரிந்தால் புரிந்து கொள்ளுங்கள், இல்லை என்றால் சும்மா இருங்கள்” என்றார்.
இதையும் படிக்க: பாஜக - தவெக கூட்டணி உருவாகுமா? - நயினார் நாகேந்திரன் பதில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.