பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
உடல் நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை, இபிஎஸ் நேற்று(அக். 6), நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது, ராமதாஸ் இபிஎஸ்ஸுடன் தனியாக அரை மணி நேரம், பாமக - அதிமுக கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக ராமதாஸ் ஆதரவாளரான எம்எல்ஏ அருள் தன்னுடைய முகநூல் பதிவில், ”மருத்துவர் அய்யாவுடன் எடப்பாடியார் தனிமையில் 30 நிமிடம் பேசியது உண்மை தான்…என்னன்னு எனக்கு எப்படி தெரியும்…” என்று குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணி தொடர்பாக, இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதய பரிசோதனைக்காக சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (அக்.5) மாலை ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார். அதேபோன்று வைகோவும் உடல் நலக் குறைவு காரணமாக அதே மருத்துவமனையில் சனிக்கிழமை (அக்.4) அனுமதிக்கப்பட்டார். அவர்கள் இருவருக்கும் மருத்துவக் குழுவினர் உரிய சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: பிரேமலதா தாயார் காலமானார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.