மேட்டூர் அணை கோப்புப் படம்
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு

மேட்டூர் அணையின் நீர்வரத்து 42,167 கனஅடியாக குறைந்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

மேட்டூர் அணையின் நீர்வரத்து 42,167 கனஅடியாக குறைந்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 59,123 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து திங்கள்கிழமை காலை வினாடிக்கு 42,167 கன அடியாக குறைந்தது.

நீர்வரத்து குறைந்தாலும் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ஜெய்ப்பூரில் பள்ளியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது

நேற்று காலை 115.18 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 116.85 அடியாக உயர்ந்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 12,000 கனஅடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 88.53 டி.எம்.சியாக உள்ளது.

The water flow of Mettur Dam has decreased to 42,167 cubic feet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்னி பேருந்துகளில் கட்டணங்களைக் குறைக்கவில்லை எனில் கடும் நடவடிக்கை! - அமைச்சர்

பளபளன்னு... ரெஜினா கேசண்ட்ரா!

கரூர் பலி: தமிழக அரசின் விசாரணை ஆணையம் தொடரும்: திமுக வழக்குரைஞர் வில்சன் பேட்டி

கரூர் பலி: ஆட்சியாளர்களின் 5 விரல்களில் ஒன்று நீதித்துறை! உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு சீமான் எதிர்ப்பு!

விஜய் சேதுபதி - புரி ஜெகன்நாத் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு!

SCROLL FOR NEXT