14 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி நாளில் சென்னையில் கனமழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார்.
சென்னையில் தீபாவளி நாளில் மழை என்பது கடந்த 2011 ஆம் ஆண்டுதான் கடைசியாக பெய்தது, அதற்குப் பிறகு இன்றுதான்(அக். 20) சென்னையில் கனமழை பெய்துள்ளதாக பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என்ன ஒரு தீபாவளி நாள், கடந்த 2011 ஆம் ஆண்டுதான் தீபாவளி நாளில் சென்னையில் இப்படி ஒரு கனமழை பெய்தது.
தென்சென்னை பகுதிகளான கிழக்குக் கடற்கரைச் சாலை(ECR), பழைய மகாபலிபுரம் சாலை(OMR) உள்ளிட்ட இடங்களில் நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது.
தீபாவளி நாளான இன்று தொடர் மழை பெய்யும், அதேசமயத்தில் விழாவினைக் கொண்டாட இடைவேளையும் கிடைக்கும். மழையுடன் கூடிய திருநாளை அனுபவிங்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.