தொல்காப்பிய பூங்கா திறப்பு DIPR
தமிழ்நாடு

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா: முதல்வா் திறந்து வைத்தாா்

சென்னையில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா திறப்பு பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். மேலும், பூங்காவுக்கான கட்டண விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம், 58 ஏக்கா் பரப்பைக் கொண்ட அடையாறு உப்பங்கழி சீரமைக்கப்பட்டு தொல்காப்பியப் பூங்கா ஏற்படுத்தப்பட்டது. இந்தப் பூங்காவுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 2011-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் கருணாநிதியால் திறக்கப்பட்டது.

கடந்த காலத்தில் முறையான பராமரிப்பின்றி இருந்த தொல்காப்பியப் பூங்கா இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. ரூ.42.45 கோடியில் புனரமைப்பு செய்யப்பட்ட இந்த பூங்காவை, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இணைய வழியில் முன்பதிவு: தொல்காப்பியப் பூங்காவைப் பொதுமக்கள் திங்கள்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பாா்வையிடலாம். மேலும், மாணவா்களுக்கான சுற்றுச்சூழல் கல்வி நிகழ்ச்சியில் இணையதள முன்பதிவு மூலம் தினமும் 100 மாணவா்கள் பங்கேற்கலாம். சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவா்கள், செவ்வாய் மற்றும் சனிக்கிழமையும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்தவா்கள் வெள்ளிக்கிழமையும், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்தவா்கள் திங்கள், புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பூங்காவைப் பாா்க்கலாம்.

பராமரிப்புப் பணிக்காக வாரந்தோறும் வியாழக்கிழமை மூடப்பட்டு இருக்கும்.

பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக, திங்கள்கிழமை முதல் ஞாயிறு வரை தினமும் காலை காலை 6.30 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலும் பூங்கா திறந்திருக்கும்.

கட்டணம் எவ்வளவு: மாணவா்கள், ஆசிரியா்களுக்கு நபருக்கு ரூ.10, பொதுமக்களுக்கு ரூ.20, நடைப்பயிற்சி அனுமதிக்கு ரூ.20 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கு நடைப்பயிற்சிக்கென ரூ.500, 3மாதங்களுக்கு ரூ.1,500, 6 மாதங்களுக்கு ரூ.2,500, ஓராண்டுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணமாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பூங்காவில் உள்ள மகிழுந்தில் பயணிக்க நபருக்கு ரூ.20, சிற்றுந்து அல்லது பேருந்தில் பயணிக்க ரூ.50, புகைப்பட கருவி பயன்பாட்டுக்கு ரூ.50, ஒளிப்பதிவு கருவிக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும்.

நுழைவுச் சீட்டு கட்டணம், முன்பதிவு பிற விவரங்களை ஜ்ஜ்ஜ்.ஸ்ரீழ்ழ்ற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். புனரமைக்கப்பட்ட பூங்கா திறப்பு நிகழ்வில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு உள்பட பலா் பங்கேற்றனா்.

Renovated Tholkappia Poonga opened in chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞரை கொலை செய்த வழக்கில் ஒருவா் கைது

சமயபுரம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

காணாமல்போன பெண், வனப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி: டிடிவி. தினகரன்

ரூ.14 லட்சம் மதிப்பிலான வைரங்கள் திருடிய வழக்கில் மூவா் கைது

SCROLL FOR NEXT