கரூருக்கு தவெக தலைவர் விஜய் சென்றால், அவரின் உயிருக்கு பாதுகாப்பு குறித்த சந்தேகமிருப்பதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களுடன் நயினார் நாகேந்திரன் பேசுகையில் ``41 உயிர்களுக்கும் பாதுகாப்பில்லை. விஜய்யின் உயிருக்கும் அங்கு பாதுகாப்பு இருக்குமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கிறது. ஏனெனில், அங்கு சென்றால் அவரின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்ற பயத்தில் இருந்திருக்கலாம்.
திமுக அரசு, எப்படி மக்கள் விரோத அரசாக இருந்து வருகிறது? கரூரில் 41 பேர் இறந்து விட்டனர், கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 65 பேர் இறந்து விட்டனர், பாலியல் வன்கொடுமையால் சாலைகளில் 10, 15 வயது பிள்ளைகள் தனியாக நிற்க முடியவில்லை.
யாருடைய ஆட்சி - திமுக ஆட்சி; யார் முதல்வர் - மு.க. ஸ்டாலின். சட்டம் - ஒழுங்கு எங்கு சரியாக இருக்கிறது? காவல் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசுகின்றனர். நல்ல நிகழ்வுகள் எங்கு நடைபெறுகின்றன? பெண்களுக்கு எதிரான போக்சோ குற்றங்கள் 53 சதவிகிதம் அதிகரித்திருக்கின்றன’’ என்று தெரிவித்தார்.
இதனிடையே, திமுக-வுக்குதான் வாய்ப்பு என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கருத்து கூறியது குறித்த கேள்விக்கு - சுதந்திர இந்தியாவில் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் இருப்பதாக நயினார் நாகேந்திரன் கூறினார்.
இதையும் படிக்க: சிறப்பு தீவிர திருத்தம்! எதிர்க்கட்சிகளின் அடுத்த நகர்வு என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.