தமிழகம் முழுவதும் தொகுதிவாரியாக திமுக நிர்வாகிகளைச் சந்தித்து தமிழக துணை முதல்வரும் கட்சியின் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்றுமுதல் ஆலோசனை நடத்தவுள்ளார்.
காஞ்சிபுரம் தொகுதியில் உள்ள ஒன்றிய, நகர நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் உதயநிதி ஆலோசிக்கவுள்ளார்.
முன்னதாக, காஞ்சிபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான அண்ணா இல்லத்துக்குச் சென்று அவரின் சிலைக்கு மாலை அணிவித்து உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அந்த புகைப்படங்களைப் பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது:
“அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காஞ்சிபுரத்திற்கு இன்று வருகை தந்த போது, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் இல்லத்துக்குச் சென்றோம்.
அங்குள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினோம். அண்ணாவின் புகழ் ஓங்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.