திருவாரூருக்கு அடிப்படை வசதிகள்கூட இல்லை என்று தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவாரூரில் பிரசாரம் மேற்கொண்டுள்ள தவெக தலைவர் விஜய் பேசுகையில்,
``திருவாரூர் தேர் என்றால் சும்மாவா? ரொம்ப நாளாக ஓடாத தேரை ஓட்டியது யாரென்று மார்தட்டிச் சொன்னது யாரென்று உங்களுக்குத் தெரியும்?
ஆனால், அவருடைய மகன், நன்றாக ஓடவேண்டிய தேரை நாலாபுறமும் தடுத்து நிறுத்தி விட்டார்.
திருவாரூர், அவர்களின் ஊர் என்று பெருமையாகச் சொல்கிறார்கள்; ஆனால், திருவாரூர் இங்கு கருவாடாகக் காய்கிறது
எல்லா இடத்துக்கும் உங்கள் பெயரை வைக்கிறீர்கள், ஆனால், உங்கள் அப்பா பிறந்த இந்த திருவாரூரில் அடிப்படை சாலை வசதிகூட இல்லை.
இங்கிருக்கும் பல்கலைக் கழகத்தில் எல்லா துறைகளும் இருக்கிறதா? இருக்காது. இங்கிருக்கும் மருத்துவக் கல்லூரிகளுக்கே வைத்தியம் பார்க்க வேண்டியிருக்கு. திருவாரூர் பேருந்து நிலையத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு சாலை இல்லை.
இந்த மாவட்டத்தின் அமைச்சர் ஒருவரின் வேலை, முதல்வர் குடும்பத்துக்கு வேலை செய்வதுதான்’’ என்று தெரிவித்தார்.
முன்னதாக, நாகையில் பிரசாரம் மேற்கொண்டிருந்த விஜய், திருவாரூர் பிரசாரத்தின்போது பச்சைத் துண்டை அணிந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? - முதல்வரை விமர்சித்த விஜய்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.