தமிழ்நாடு

கொலை முயற்சி, அஜாக்கிரதையாக செயல்பட்டது உள்ளிட்ட 4 பிரிவுகளில் தவெக மீது வழக்கு

கொலை முயற்சி, மரணம் விளைவித்தல், அதிகாரிகள் உத்தரவை மதிக்காதது, அஜாக்கிரதையாக செயல்பட்டது ஆகிய 4 பிரிவுகளின்கீழ் வழக்கு

இணையதளச் செய்திப் பிரிவு

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 39 பேர் பலியான நிலையில், தவெக நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில், சனிக்கிழமையில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி, 39 பேர் பலியான நிலையில், தவெகவின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன் உள்பட தவெக நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொலை முயற்சி, மரணம் விளைவித்தல், அதிகாரிகள் உத்தரவை மதிக்காதது, அஜாக்கிரதையாக செயல்பட்டது ஆகிய 4 பிரிவுகளின்கீழ் தவெக நிர்வாகிகள் மீது கரூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக, அவர்கள் கைது செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளன.

கரூரில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கரூர் விரைந்து சென்று, பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: அழுகுரல் ஏற்படுத்திய வலி நெஞ்சத்திலிருந்து அகலவில்லை: முதல்வர் ஸ்டாலின்

Karur Stampede: Case filed against the TVK District Secretary

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இனி விஜய்யின் பேச்சு தொடருமா?

விஜய் வீட்டுக்கு ராணுவ பாதுகாப்பு!

இன்று ஸ்பெயின்... பந்தயத்துக்குத் தயாரான அஜித்!

இறுதிப் போட்டியில் ஹார்திக் பாண்டியா விளையாடுவதில் சிக்கல்! மாற்று வீரர் யார்?

கரூர் கூட்ட நெரிசல் பலி: இபிஎஸ் பிரசாரம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT