முகப்பு
தமிழ்நாடு

தளபதிதான் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்: செந்தில் பாலாஜி

முதல்வராக மீண்டும் இரண்டாவது முறையாக மு.க. ஸ்டாலின் ஆட்சியேற்பார் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை

Updated On : 29 ஏப்ரல், 2026 at 5:47 PM
மு.க. ஸ்டாலின் | செந்தில் பாலாஜி | விஜய் - கோப்புப் படம்
பகிர்:

முதல்வராக மீண்டும் இரண்டாவது முறையாக மு.க. ஸ்டாலின் ஆட்சியேற்பார் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் செந்தில் பாலாஜி பேசியதாவது, "சிலரைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. கரூரில் அவர்களின் (விஜய்) கூட்டத்தில் 41 பேர் பலியாகினர். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் இருந்தபோது, கூட்டம் நடத்தியவர்கள் ஓடிவிட்டனர்.

நான்தான் மருத்துவமனையில் நின்றேன், மற்ற கட்சியினரும் உடனிருந்தனர். உள்ளூரில் மக்களுக்குத் தேவையான உதவிகளை நாங்கள்தான் செய்தோம்.

Advertisement

விட்டுவிட்டு ஓடியவர்களைப் பற்றியோ மக்களைச் சிந்திக்காதவர்கள் பற்றியோ பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

இரண்டாவது முறையாக தளபதி (மு.க. ஸ்டாலின்) ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்" என்று தெரிவித்தார்.

summary

Former Minister Senthil Balaji expresses confidence that M.K. Stalin will assume office as Chief Minister for a second term

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.