FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றி...

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 2:29 pm IST
உதயநிதி ஸ்டாலின் - from video grab
பகிர்:

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமைஉத்தரவிட்டுள்ளது.

திமுக ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக 9 பிரிவுகளின் கீழ் தஞ்சாவூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி இல்லத்துக்கு இன்று காலை சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர்.

Advertisement

Advertisement

இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யத் தடை விதிக்க கோரி அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அமர்வில் இன்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர், ”உதயநிதி ஸ்டாலினை காவலில் வைக்கும் எண்ணம் இல்லை. தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்தப்பட்டு, காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்படுவார்” என்று தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், இன்று இரவுக்குள் விசாரணையை முடித்து, இன்றைக்குள் உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.

summary

Udhayanidhi must be released today - Chennai High Court!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments